விஜயனின் வருகை மற்றும் அவனது செயற்பாடு (சுருக்கம்)

🎯 விஜயனின் வருகை மற்றும் அவனது செயற்பாடு (சுருக்கம்)

 

📌விஜயன் என்ற பெயரால் அறிமுகமான இளவரசனும் , அவனது குழுவினரான எழுநூறு பேரும் கி.மு. 544 ஆம் ஆண்ட ளவில் இந்தியாவிலிருந்து வந்து இலங் கையில் குடியேறினர் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது .

📌எமது நாட்டின் வரலாற்றைக் கற்பதற்குத் துணை புரியும் மகாவம்சம் என்ற நூலில் இது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது .

📌இவர்கள் தம்பபண்ணி எனப்படும் இடத்தில் வந்து இறங்கினர் .

👉இது இலங்கையின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ள இடமாகும் .

📌விஜயன் இலங்கைக்கு வரும் பொழுது
👉இயக்கர்
👉நாகர்
👉தேவர் போன்ற மக்கள் குலத்தவர் இங்கு வாழ்ந்தாக நம்பப்படுகின்றது .

📌இயக்கர் குலத்தைச் சேர்ந்த குவேனி என்ற பெண் விஜயனின் குழுவினரை மாய சக்தியின் மூலம் பிடித்து ஒழித்து வைத்தாள் .

📌தன்னுடன் வந்தவர்களைத் தேடிச் சென்ற விஜயன் குவேனியை சந்தித்தான் .
அவ் வேளையில் அவள் நூல் நூற்றுக் கொண்டிருந்தாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது .

📌குவேனி இயக்கர் குலத்தைச் சேர்ந்த பெண் என்பதை அறிந்து கொண்ட விஜயன் தனது வாளை உயர்த்தி அவளைப் பயமுறுத்தி ஒழித்து வைத்திருந்த தனது குழுவினரை மீளப் பெற்றுக் கொண்டான் .

📌பின்னர் விஜயன் குவேனியைத் திருமணம் செய்து கொண்டான் .

📌இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர் .
👉ஜீவஹத்த
👉திசால என்பது அவர்களின் பெயர்களாகும் .

இயக்கர்களுக்கு உரிய நகரங்கள் இரண்டு இருந்தன .
👉சிறிசவத்து
👉லங்காபுர
என்பனவே அவைகளாகும் .

📌சிறிசவத்து நகரில் விழாவொன்று நடந்தபோது இரவில் அனைத்து இயக்கர்களையும் அழித்து இலங்கையின் அரசனாவதற்குக் குவேனி விஜயனுக்கு உதவினாள் .

📌இயக்கர்களை அழித்த பின்னர் விஜயன் குவேனியைக் கைவிட்டு , சத்திரிய குல மரபிற்கு அமைவாக தென் இந்தியாவில் இருந்து பாண்டிய இளவரசியை வரவழைத்து அவளைத் திருமணம் செய்து கொண்டான் .

📌விஜயனுடன் வந்த குழுவினர் பல்வேறு இடங்களிலும் குடியேறினர் .
👉மல்வத்து ஓயா
👉கலா ஓயா
நதிக் கரைகளை அண்டிய பகுதிகளில் அவர்கள் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டதாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது .

👉உபதிஸ்ஸ என்ற அமைச்சனால் உபதிஸ்ஸகமவும்

👉அநுராத என்றஅமைச்சனால் அநுராதகமவும்

👉உருவெல என்ற அமைச்சனால் உருவெலகமவும் அமைக்கப்பட்டன .

📌விஜயன் உள்ளிட்ட குழுவினர் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்களென மகாவம்சம் குறிப்பிடுகிறது .

📌இவர்களின் வருகையின் பின்னர் இந்திய சமுதாயத்தில் அக் காலத்தில் நிலவிய பழக்கவழக்கங்கள் இந்நாட்டிலும் பரவத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்