Short Notes - கண்டி இராச்சியம்

 

கண்டி இராச்சியம்

————————————-

⚙️1505 – போர்த்துக்கேயர்  ( கரையோரம் )
⚙️1658 – ஒல்லாந்தர் ( கரையோரம் )
⚙️1796 – ஆங்கிலேயர் ( கரையோரம் )
⚙️1815 – ஆங்கிலேயர் ( முழு இலங்கை )

_____________________________________

போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருகையில் இலங்கையிலிருந்த இராசதானிகள்

⚙️கோட்டை : 8ம் வீர பராக்கிரமபாகு
⚙️கண்டி : சேனா சம்பத விக்ரமபாகு
⚙️யாழ்ப்பாணம் : பரராச சேகரம்
⚙️வன்னி : வன்னியர்

_____________________________________

Join Our Educational Group

கண்டி இராச்சியத்தின் பாதுகாப்பு அரண்கள்

⚙️மகாவலி கங்கை
⚙️பலனை,உன்னஸ் கிரிய போன்ற கஷ்டமான பாதைகள்
⚙️பள்ளத்தாக்குகள்
⚙️வனங்கள்

_____________________________________

கண்டியை தனி இராச்சியமாக உருவாக்கிய மன்னன்

⚙️சேனா சம்பத விக்ரமபாகு

_____________________________________

சேனா சம்பத விக்ரமபாகுவை அடுத்து அரசனான அவனின் மகன்

⚙️ஜயவீர பண்டார

————————————-

Join Our Educational Group

6ம் விஜயபாகுவின் மகன் மார்கள்

⚙️7ம் புவனேகபாகு
⚙️ரைகம
⚙️மாயாதுன்ன

————————————-

மாயாதுன்ன , ரைகம பண்டார , 7ம் புவனேகபாகு இம்மூவரும் சேர்ந்து தனது தந்தையான 6ம் விஜயபாகுவை கொன்றுவிட்டு கோட்டை இராச்சியத்தை 3 பிரிவாக பிரித்து ஆட்சி செய்தனர்.

⚙️சீதாவக்க : மாயாதுன்ன பிறகு (1ம் இராஜசிங்கன்) இருவரும் வீரமானவர்கள்

⚙️ரைகம : ரைகம பண்டார

⚙️கோட்டை : 7ம் புவனேகபாகு பிறகு (தர்மபாலன்)

————————————-

சேனா சம்பத விக்ரமபாகு வின் மகனான ஜயவீர பண்டார
6ம் விஜயபாகுவை கொலை செய்ய தனது நண்பனான மாயாதுன்னவிற்கு உதவி புரிந்தார்

————————————-

ஜயவீர பண்டார மரணித்த பிறகு அவனது மகனான கரலியத்த பண்டார கண்டி இராச்சியத்திற்கு அரசனானான்

————————————-

கரலியத்த பண்டார போர்த்துக்கேயருடன் உடன்பாடான கொள்கையை கடைபிடித்தான்

————————————-

இதனை எதிர்த்த கண்டி பிரதானிகள் சீதாவக்கை மன்னன் 1ம் இராஜசிங்க மன்னனுக்கு தமது ஆதரவை வழங்கினர்

————————————-

கண்டி இராச்சிய பிரதானி வீரசுந்தர பண்டார 1ம் இராஜசிங்க மன்னனுக்கு கண்டி இராச்சியத்தை ஆக்கிரமிக்க உதவி புரிந்தார்

————————————-

இவ்வாக்கிரமிப்பிற்கு முகம் கொடுக்க இயலாமையால் கரலியத்த பண்டாரவின் மகளான குசுமாசன தேவியும் கரலியத்த பண்டாரவின் மருமகன் யமசிங்க பண்டாரவும் போர்த்துக்கேயரிடம் தஞ்சமடைந்தனர்.

————————————-

குசுமாசன தேவி : டோனா கத்தரினா
யமசிங்க பண்டார : டொன் பிலிப்

எனும் பெயரில் கிறிஸ்தவ சமயத்தை தழுவிக் கொண்டனர்

————————————-

வீரசுந்தர பண்டாரனின் நடத்தையில் சந்தேகமுற்ற 1ம் இராஜசிங்கன் அவனை கொலை செய்தான்

————————————-

வீரசுந்தர பண்டாரவின் மகன் கோணப்பு பண்டாரவும் போர்த்துக்கேயரிடம் தஞ்சமடைந்து டொன் ஜுவான் எனும் பெயரில் கிறிஸ்தவனானான்

————————————-

போர்த்துக்கேயரின் உதவியுடன் கோணப்பு பண்டார அடங்கிய குழுவொன்றுடன் யமசிங்க பண்டார கண்டி இராச்சியத்திற்கு சென்று கண்டியை கைப்பற்றினான்

————————————-

யமசிங்க பண்டார மரணித்த பிறகு இளம் புதல்வனை மன்னனாக்க முயற்சித்த போர்த்துக்கேயர்களை எதிர்த்து மலை நாட்டவரின் ஆதரவை பெற்று 1ம் விமலதர்ம சூரியன் எனும் பெயரில் மன்னனானான்.

————————————-

முதலாம் விமலதர்மசூரியன் எதிர்கொண்ட சவால்கள்

⚙️சட்டபூர்வ ஆட்சி உரிமை இல்லாமை

⚙️கண்டி இராசதானியை போர்த்துக்கேயரிடம் இருந்து பாதுகாக்கவேண்டி இருந்தமை

⚙️சீதாவக்கை ஆதிக்கத்திலிருந்து கண்டி இராசதானியை காப்பாற்ற வேண்டியிருந்தமை

⚙️பௌத்த சமய வீழ்ச்சி

⚙️பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டியிருந்தமை

————————————-

ஆட்சியின் சட்டபூர்வ தன்மையை நிலைநாட்டிக்கொள்வதற்காக விமலதர்ம சூரிய மேற்கொண்ட நடவடிக்கைகள்

⚙️குசுமாசன தேவியை திருமணம் செய்வதன் மூலம் ஆட்சி உரிமை நிலைநாட்டிக்கொண்டமை

⚙️விமலதர்ம சூரிய எனும் பெயரில் பௌத்த சமயத்தை தழுவிக்கொண்டான்

⚙️புனித தந்தத்தை கண்டியில் பிரதிஷ்டை செய்தமை

⚙️விகாரைகளை புணர் நிர்மானம் செய்தான்

⚙️உபசம்பதா நிகழ்வை நடத்தினான்

இது போன்று தொடர்ச்சியாக Notes பெற்றுக்கொள்ள எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்.

கட்டாயம் எமது குழுக்களில் இணைந்து இருங்கள்.

Join Our Educational Group

 

source


Download

கருத்துரையிடுக

0 கருத்துகள்