அரசாங்கத்தின் வீதித் தடைகளே எமது முதல் வெற்றி

நவம்பர் – 16, செவ்வாய் – 2021

▪️இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக அரசியல் கட்சியொன்றினால் நடாத்தப்படும் போராட்டத்திற்கு எதிராகத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு சுமார் 70 பொலிஸ்நிலையங்கள் நீதிமன்றத்தில் கோரியிருக்கின்றன.

▪️மக்களின் ஜனநாயகப்போராட்டங்களை அடக்குவதற்கும் அவர்களது கருத்துச்சுதந்திரத்தை முடக்குவதற்குமான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டமை கண்டனத்திற்குரியதாகும்.

▪️அதுமாத்திரமன்றி அம்முயற்சிகளுக்கு உறுதுணையாக செயற்பட்ட பொலிஸ்மா அதிபருக்கும் சட்டங்களைத் தமக்கேற்றவாறு பயன்படுத்திக்கொள்வதற்கு முற்பட்டோருக்கும் எதிராக விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் இதனை சர்வதேச மட்டத்திற்கும் கொண்டுசெல்வோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

▪️அதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான இந்தப் போராட்டம் முடிவல்ல. வெறும் ஆரம்பம் மாத்திரமே. எதிர்வருங்காலங்களில் நாம் முன்னெடுக்கவுள்ள போராட்டங்கள் அனைத்தையும் அரசாங்கத்தினால் தடுக்கமுடியாது.

▪️அதுமாத்திரமன்றி இப்போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு நாடளாவிய ரீதியிலிருந்து மக்கள் திரண்டு வருகின்றார்கள் என்பதைப் புரிந்துகொண்ட அரசாங்கம், நாட்டின் அனைத்துப்பாகங்களிலும் தடைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுவே எமக்குக்கிடைத்த வெற்றியாகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்