வாகனங்களில் பயணிப்போருக்கு பொலிஸார் விடுத்த அறிவித்தல் தவறினால் சட்ட நடவடிக்கை

▪️வாகனங்களில் செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவிக்கின்றார்.

▪️கொவிட் பரவலை தவிர்க்கும் நோக்கில், மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கும் திட்டமொன்று பொலிஸாரினால் இன்று (23) முன்னெடுக்கப்பட்டது.

▪️இதில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

▪️வாகனங்களில் குடும்ப உறுப்பினர்கள் இல்லாதவர்களுடன், பலர் தற்போது பயணித்து வருவதாகவும், அவ்வாறானவர்கள் முகக் கவசம் அணிவதில்லை எனவும் அவர் கூறினார்.

▪️முச்சக்கரவண்டி சாரதிகள், பயணிகளுடன் பயணிக்கும் போது, கட்டாயம் முகக் கவசத்தை அணிய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

▪️முகக் கவசம் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற தவறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவிக்கின்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்