📖 READING & WRITING PRACTICE📖 ✏️ ENGLISH VOCABULARY✏️ 🔰 TODAY'S 10 WORDS 🔰

இன்றைய 10 சொற்கள்!

1. Reprimand (ரெப்ரிமென்ட்) – கண்டனம்.
மட்டைப்பந்து ஆட்டக்காரர் விதிகளை மீறியதால் கண்டனம் பெற்றார்.
The cricket player received a reprimand for a breach of rules.

2. Caution (கௌஷன்) – எச்சரிக்கை.
நீங்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
You have to move cautiously in this matter.

3. Curse (கர்ஸ்) – சபித்தல்.
திருடன் அவனைக் கண்டுபிடித்ததால் காவல்காரர்களை சபித்தான்.
The thief cursed the police for finding him.

4. Grave (கிரேவ்) – கல்லறை.
ராஜா மேரியின் கல்லறையில் சில மலர்களை தூவினான்.
Raja put some flowers on Mary′s grave.

5. Mentor (மென்டார்) – நம்பிக்கையான அறிவுரையாளர்.
நீங்கள் எனக்கு ஒரு சிறந்த நம்பிக்கையான அறிவுரையாளராக இருக்கிறீர்கள்.
You have been a great mentor to me.

6. Peculiar (பெக்குலியர்) – விசித்திரமான.
அவர் மிகவும் விசித்திரமான நபர் ஆவார்.
He is a very peculiar person.

7. Recite (ரிசைட்) – ஒப்பி/வாசி
அவரது மகள் பல கவிதைகளை வாசிக்கிறாள்.
Her daughter recite many poems

8. Bribe (பிரைப்) – லஞ்சம்.
அவர் லஞ்சம் கொடுக்க மறுத்தார்.
He refused to give the bribe.

9. Steal (ஸ்டீல்) – திருடு.
இது பணத்தை திருடுவதற்கு நிறுவனத்தின் மற்றொரு முயற்சியாகும்.
This is just another attempt by the company to steal money.

10. Stir (ஸ்டிர்) – கலக்கு.
அவர் சாயத்தை பயன்படுத்துவதற்கு முன் கலக்கினார்.
He stirred the paint before using it.

கருத்துரையிடுக

0 கருத்துகள்