உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படுமா?

பெப்ரவரி-7 ல் நடைபெறவுள்ள

GCE A/L பரீட்சையை மேலும் 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல்.

 

சமூக செயற்பாட்டாளர் நாகானந்த கொடித்துவக்கு இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

 

எதிர்வரும் 07 ஆம் திகதிஆரம்பிக்கப்படவுள்ள கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையினை 20 வாரங்களுக்கு ஓத்திவைக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, பரீட்சைகள் ஆணையாளர், கல்வி அமைச்சின் செயாலாளர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்கள் இதுவரை பாடதிட்டங்களை முழுமையாக நிறைவு செய்யவில்லை.

 

ஆகையினால் மாணவர்களுக்கு பாடதிட்டங்களை நிறைவு செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்படுவது அவசியமாகும்.

 

இந்நிலையில் பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைத்து மாணவர்களுக்கு கற்பதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குமாறு சமூக செயற்பாட்டாளர் நாகானந்த கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்

NOTE:

பரீட்சையை ஒத்திவைக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் நீதிமன்றம் உத்தரவிடவுமில்லை, பரீட்சை திகதியில் மாற்றம் செய்யப்படவுமில்லை என்பதை கவனத்திற்கொள்க.

28.01.2022

கருத்துரையிடுக

0 கருத்துகள்