பாடசாலை நேரத்தை அதிகரித்தல் – முதலாவது எதிர்ப்பு

பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரிப்பதற்கான அறிவிப்பிற்கு இலங்கை அரச ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

பாடசாலை மணித்தியாலங்களை 6 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை கற்றல் உளவியலின் அடிப்படையில் என்றும் இதனை அதிகரிப்பது மாணவர் உளவியிலுக்கு எதிரானது என்றும் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

அவ்வாறு பாடசாலை நேரத்தை கட்டாயம் அதிகரிக்க வேண்டி ஏற்படின், பின்வரும் இரு விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என சங்கம் வேண்டியுள்ளது.

1. மாணவர்களின் பயண ஏற்பாடுகள் தொடர்பாக தெளிவான திட்டம் வேண்டும்

2. மாணவர்களுக்கு போஷாக்கு மிக்க மதிய உணவு வேளை வழங்க வேண்டும்.

  • சங்கத்தின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளருக்கு இது தொடர்பாக அனுப்பியுள்ள கடித்த்திலேயே இவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்