scholarship for students by the president's fund

க.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்து உயர்தரத்துக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்

 

இதன்படி, 99 கல்வி வலயங்களைச் சேர்ந்த 2,970 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 99 கல்வி வலய அலுவலகங்களில் இருந்து தலா 30 புலமைப்பரிசில் வெற்றியாளர்களை தெரிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ள

 

தேர்ந்தெடுக்கப்பட்ட புலமைப்பரிசில் வெற்றியாளர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை அதிகபட்சமாக 24 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.5,000/- உதவித்தொகையாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

2021 க.பொ.த சாதாரண தர சித்தியடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

.

இதன்படி, இந்தப் பொறிமுறை தொடர்பில் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கான விண்ணப்ப படிவம் பெற்றுக்கொள்ளும் முறையினை அறிய இங்கே அழுத்தவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்