வட்டியில்லா கல்விக் கடன் திட்டம் ஆரம்பம் :- கல்வி அமைச்சு அறிவிப்பு!


வட்டியில்லா கல்விக் கடனுதவித் திட்டத்தின் 7 ஆம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை எதிர்வரும் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 07 ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்களை அனுப்பலாம்.

இதன்மூலம் 2019/2020/2021 ஆம் ஆண்டுகளில் இலங்கைப் பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 www.studentloans.mohe.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க முடியும் எனவும், வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் மாணவர் கையேட்டைப் பார்த்து இது தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

1 கருத்துகள்